நன்மைகளின் நாயகனே, நன்றி சொல்லி மகிழ்கிறேன்

உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே

நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா

உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே

 

1.

கடந்த ஆணடெல்லாம்

கண்மணி போல் காத்தீரே

புதிய (ஆண்டு) நாள் தந்து

புதியன (புதுமைகள்) செய்பவரே – நன்மைகளின்

 

2.

உமக்காய் கத்திருந்து

புதுபெலன் அடைகின்றேன்

உம்மையே பற்றிக் கொண்டு

புதிய மனுஷனானேன் – நன்மைகளின்

 

3.

கர்த்தர் கரம் என்னோடு

இருப்பதை உணர வைத்தீர்

அநேகர் அறிக்கையிட‌

அப்பா நீர் கிருபை செய்தீர்   – நன்மைகளின்

 

4.

எனக்கு எதிரானோர்

என் சார்பில் வரவைத்தீர்

சமாதானம் செய்ய வைத்தீர்

சர்வ வல்லவரே           – நன்மைகளின்

 

5.

எப்சிபா என்றழைத்து

என்மேலே பிரியமானீர்

பியூலா என்றழைத்து

மணமகளாக்கிவிட்டீர் – நன்மைகளின்

 

6.

ஏசேக்கு, சித்னா

இன்றோடு முடிந்தது

ரெகோபோத் தொடங்கியாது

தடைகளும் விலகியது      – நன்மைகளின்

 

7.

பழையன கடந்தன

புதியன புகுந்தன‌

எல்லாமே புதிதாயிற்று

அல்லேலுயா  பாடுவேன்     – நன்மைகளின்



nanmaikalin nayakane, nanri solli makizkiren

unmaiyulla theyvame, uyirodu kalanthdhavare

nanmaikalin nayakane nanri nanri aiya

unmaiyulla theyvame uyirodu kalanthdhavare

 

1.

katanthdha aanadellam

kanmani bol kaththire

buthiya (aandu) nal dhanththu

buthiyana (buthumaikal) seypavare –  nanmaikalin

 

2.

umakkay kaththirunththu

buthubelan adaikinren

ummaiye parrik kondu

buthiya manushananen –  nanmaikalin

 

3.

karthdhar karam ennodu

irubpathai unara vaiththir

a nekar arikkaiyita‌

abba nir kirubai seythir   –  nanmaikalin

 

4.

enakku ethiranor

en sarbil varavaiththir

chamathanam seyya vaiththir

charva vallavare           –  nanmaikalin

 

5.

ebsiba enrazaiththu

enmele biriyamanir

biyula enrazaiththu

manamakalakkividdir –  nanmaikalin

 

6.

eesekku, sithna

inrodu mudinthdhathu

rekoboth thotangkiyathu

dhadaikalum vilakiyathu      –  nanmaikalin

 

7.

pazaiyana katanthdhana

buthiyana bukunthdhana‌

ellame buthithayirru

alleluya  baduven     –  nanmaikalin